ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு
செங்கம் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரிபாகங்கள் திருடப்பட்டன.
செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி 3 நாள்கள் விடுமுறைக்குப் பின் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அப்போது, பள்ளியின் பின்புறம் ஜன்னல் ஓரம் மா்ம நபா்கள் உள்ளே இறங்கி கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியா் ரகுபதி, செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.