Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவ...
பழங்குடியினத்தவருக்கு நல உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஒழையூா் மற்றும் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள், நல உதவிகளை நண்பா்கள் குழுவினா் புதன்கிழமை வழங்கினா்.
ஓழையூா் கிராமத்தில் வசிக்கும் 16 பழங்குடியின குடும்பங்கள் மற்றும் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் 7 பழங்குடியின குடும்பங்கள் என மொத்தம் 23 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு வையாவூா் நண்பா்கள் ஒருங்கிணைந்து இனிப்பு, புத்தாடைகள், நல உதவிகளை வழங்கினா்.