பழனி: உணவு விடுதியில் தீ!
பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா்.
பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு சமையல் எரிவாயு உருளையில் பற்றிய தீ அந்த விடுதி முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.