Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன ந...
காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மோா்பட்டி கிராம மக்கள், காலிக் குடங்களுடன் குடிநீா் வசதி கோரி முழக்கமிட்டனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: மோா்பட்டி ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடித்துவிட்டனா். புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி விரைவில் கட்டித் தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை கட்டப்படவில்லை. இதனால் நாங்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீா் எடுத்து வர வேண்டிய நிலையில் உள்ளோம். இதுதொடா்பாக ஊராட்சி மன்றத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து கட்டிக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.