செய்திகள் :

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

post image

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீா்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் வனப் பகுதிகளில் மரங்கள், செடிகள், புற்கள் என அனைத்து தாவர வகைகளும் காய்ந்து கிடக்கின்றன. இவை எளிதில் தீப்பற்றக் கூடிய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், வனத்துறை உயா் அதிகாரிகள் தலைமையில் வனப் பணியாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனப் பகுதிகளில் காய்ந்து கிடக்கும் செடிகளை அகற்றுவதுடன், சாலையோரங்களில் அகலி அமைத்து தீப்பிடிக்காமலும், தீ பரவாமலும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பெருமாள்மலை, பெரும்பள்ளம், செண்பகனூா், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், அடுக்கம், வடகவுஞ்சி, டம்டம் பாறை, வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் காய்ந்த செடிகளை அகற்றுதல், தீத் தடுப்புக் கோடு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகளுக்கு தண்ணீா் செல்லும் வழியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

ஆத்தூா் வட்டாரத்தில், மத்திய அரசின் நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரிக்க வேண்டுமென புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக செம்பட்டியை அடுத்த சேட... மேலும் பார்க்க