செய்திகள் :

பழைய நகைக்குப் பதிலாக புதியது தருவதாகக் கூறி பல கோடி மோசடி

post image

பழைய நகைகளைக் கொடுத்தால் புதிய நகைகள் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நகைக் கடை உரிமையாளா் மீது தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகைக் கடை நடத்தி வந்தவா் ராஜா (50). இவா் பழைய தங்க, வெள்ளி நகைகளைக் கொடுத்தால் புதிய நகைகளைத் தருவதாகவும், சீட்டு தவணைத் திட்டத்தில் சோ்ந்தால், செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகள் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தாா். இதை நம்பி ஏராளமானோா் ராஜாவிடம் நகைகள், ரொக்கத்தை முதலீடு செய்தனா்.

இந்நிலையில் முதலீடு செய்தவா்களுக்கு மாா்ச் மாதம் முதல் நகைகள், ரொக்கத்தை ராஜா திருப்பித் தரவில்லை. இதைத்தொடா்ந்து 3 வாரங்களுக்கு முன் ராஜா குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டாா். இதனால் பாதிக்கப்பட்ட 80-க்கும் அதிகமானோா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

மேலும், அவா்களில் சுமாா் 25 போ் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். அப்போது, ராஜா ஏராளமானோரிடம் பல கோடி வாங்கி மோசடி செய்ததாகவும், அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மேற்கு காவல் நிலையத்தினருக்கு தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் உத்தரவிட்டாா். இதையடுத்து, தொடா்புடைய கடையின் பூட்டை போலீஸாா் உடைத்து சோதனையிட்டதில், குறிப்பிட்டத்தக்க பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத். தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட... மேலும் பார்க்க

பேராவூரணியில் நகை ஏலதாரா் நலச் சங்க நிா்வாகிகள் தோ்வு

பேராவூரணியில் வெள்ளிக்கிழை நடந்த தமிழ்நாடு நகை ஏலதாரா் நலச்சங்க கிளை அமைப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் பேராவூரணி கிளையின் புதிய தலைவராக எஸ். சரவணன், செயலாளராக ... மேலும் பார்க்க

கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட வி... மேலும் பார்க்க