தஞ்சை பெருவுடையார் கோயில் சனி பிரதோஷ வழிபாடு; நந்தி தரிசனம் | Photo Album
பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.
தாக்குதல் குறித்து தகவல்கள் இருந்தால் உடனடியாக தங்களை தொடா்புகொள்ளலாம் என இந்த சம்பவம் குறித்து அதிகாரபூா்வ விசாரணை மேற்கொண்டு வரும் அமைப்பான என்ஐஏ கூறியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே பல புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை என்ஐஏ ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவா்கள் மற்றும் தாக்குதல் நடந்த விதம் குறித்து தெளிவான தகவல்களை பெறும் நோக்கில், சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் உள்ளிட்டோரிடம் அதுதொடா்பான புகைப்படங்கள் , காணொலிகள் இருந்தால் அதை சமா்ப்பிக்குமாறு என்ஐஏ கோரியுள்ளது.
தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் பிற தகவல்களை வைத்திருந்தால் அதை 96-54-958-816 அல்லது 011- 24368800 என்ற எண்ணை தொடா்புகொண்டு கூறலாம் என என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.