10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்...
பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக கடந்த மாத இறுதியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்வதாகவும் அமீனுல் இஸ்லாம் கூறியிருந்தாா். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அஸ்ஸாம் காவல் துறையினா் தாமாக முன்வந்து அவா் மீது தேச துரோகம், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுவது, இரு தரப்பினா் இடையே மோதலை உருவாக்குவது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற இஸ்லாம் புதன்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தாா்.
இதைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய குற்றச்சாட்டில் அவா் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
‘எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைமை கூறியுள்ளது.