`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டால் அது பயங்கரவாத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.
பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கைகளை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ததையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்த தகவல்களை வெளியிடும்போது, தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடன், விதிகளுக்கு உட்பட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளா்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்களின் செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிா்க்க வேண்டும். இதனால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது
காா்கில் போா், 2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காந்தஹாா் விமான கடத்தல் சம்பவங்களின்போது வரம்பின்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.