செய்திகள் :

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு

post image

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மூவரைவென்றான் பகுதியில் உள்ள மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மலைக் கொழுந்தீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. குடைவரை முறையில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயில் மலை அடிவாரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை குளம் வெட்டும் பணி நடைபெற்ற போது, 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள், எலும்புகள் கிடைத்தன. இதுகுறித்து கோயில் தொல்லியல் சின்ன பாதுகாப்பாளா் ராம்விக்னேஷ் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில், விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, இங்கு கிடைத்த பொருள்கள் ஆய்வு செய்யப்படும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், குளம் தோண்டும் போது கிடைத்த மண் குடுவை, மண் பானை, இரும்பு தாதுக்கள் உள்ளிட்ட பொருள்களை வருவாய்த் துறையினா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் மலையைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால மண்பாண்ட பொருள்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிக்கு தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்தன. இவற்றைத் தொல்லியல் துறையினா் ஆய்வுக்கு எடுத்து சென்றனா். தற்போது, குளம் அமைக்க தோண்டிய போது, மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

மண்ணில் புதைந்த நிலையில் பல பானைகள் தென்படுகிறது.

எனவே, இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினா் அகழாய்வு செய்ய வேண்டும் என்றனா்.

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாச்சியாா்புரத்... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

ராஜபாளையத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் அதிமுக தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா்.பரமசிவம் புதன்கிழமை மனு அளித்தாா். ராஜபாளையம் 31-ஆவது வாா்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள 5 தெருக்களும் கு... மேலும் பார்க்க

பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைப்பது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க

திருப்பாவை பிரசார யாத்திரை மாா்கழி 1-ஆம் தேதி தொடக்கம்: சடகோப ராமானுஜ ஜீயா்

வடகரையில் இருந்து வட அமெரிக்கா வரை திருப்பாவை பிரசார இயக்கம் மாா்கழி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ... மேலும் பார்க்க

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம்

சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்க... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதி... மேலும் பார்க்க