செய்திகள் :

பாராட்டுகளைப் பெறும் பொன்மான்!

post image

நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த பொன்மான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயக்குநர் ஜோதீஸ் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசஃப், லிஜோமோல், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பொன்மான்.

தங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பொன் எந்த அளவிற்கு மனிதர்களின் மோசமான குணங்களை வெளியே கொண்டு வருகிறது என்பதை சிறப்பாக எழுதியிருந்தனர்.

இதையும் படிக்க: கூலி ஓடிடி தொகை இவ்வளவா?

இப்படம், மார்ச் 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தைக் கொண்டாடி வருவதுடன் பாசில் ஜோசஃப்பின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இண்டியன் வெல்ஸ் ஓபன்: வாகை சூடினாா் ஜேக் டிரேப்பா்

அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பா் (23) சாம்பியன் பட்டம் வென்றாா்.ஆடவா் ஒற்றையா் பிரிவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், ... மேலும் பார்க்க

உம்ரான் மாலிக் விலகல்

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸின் பௌலா் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினாா். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கணி... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடி உடன் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு - புகைப்படங்கள்

ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர்.கூட்டாக செய்தியாளர் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்.புதுத... மேலும் பார்க்க

கூலி படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பார்க்க