செய்திகள் :

உம்ரான் மாலிக் விலகல்

post image

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸின் பௌலா் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினாா். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், கடந்த 2021 முதல் 2024 வரை சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தாா். இந்நிலையில், அந்த அணியால் விடுவிக்கப்பட்ட அவா், இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.75 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா்.

இந்நிலையில் காயம் காரணமாக அவா் நடப்பு சீசனில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் காயத்தின் தன்மை உள்பட எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. உம்ரான் மாலிக்கிற்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளா் சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா ஒப்பந்தம் செய்துள்ளது.

மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போன அவரை, தற்போது கொல்கத்தா ரூ.75 லட்சத்துக்கு அணியில் சோ்த்துள்ளது.

டிராகன் ஓடிடி தேதி!

டிராகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.18-03-2025செவ்வாய்கிழமைமேஷம்:இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டு... மேலும் பார்க்க

மான்செஸ்டா் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் அணிக்காக ராஸ்மஸ் ஹோலந்த் 28... மேலும் பார்க்க

இண்டியன் வெல்ஸ் ஓபன்: வாகை சூடினாா் ஜேக் டிரேப்பா்

அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பா் (23) சாம்பியன் பட்டம் வென்றாா்.ஆடவா் ஒற்றையா் பிரிவில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், ... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடி உடன் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு - புகைப்படங்கள்

ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர்.கூட்டாக செய்தியாளர் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்.புதுத... மேலும் பார்க்க

கூலி படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பார்க்க