செய்திகள் :

எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

post image

நடிகர் ரஜினிகாந்த் எம்புரான் டிரைலர் பார்த்ததை ப்ரித்விராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.

மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இதையும் படிக்க: திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!

எம்புரான் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ், “எம்புரான் டிரைலரை பார்த்த பின் நீங்கள் என்னிடம் சொன்னவை என் வாழ்நாளுக்குமானது. இந்த உலகமே எனக்கானதுபோல் இருக்கிறது. ஒரிஜினல் சூப்பர்ஸ்டாரே, நான் எப்போதும் உங்களின் தீவிர ரசிகன்” எனத் தெரிவித்துள்ளார்.

எம்புரான் படமே மோகன்லால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.

‘திரையரங்கம் சிதறட்டும்..’ வெளியானது ஓஜி சம்பவம்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் பாடல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 23 நாள்களே உள்ள நிலையில் படத... மேலும் பார்க்க

இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!

மகேந்திர சிங் தோனி மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து நடித்த விளம்பரம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22 முதல் துவங்கவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ப... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் பிரபல தொடர்! சோகத்தில் ரசிகர்கள்!

பனி விழும் மலர் வனம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ஈரமான ரோஜாவே - 2 தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் பிரதான பாத... மேலும் பார்க்க

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!

நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந... மேலும் பார்க்க

தொப்பை ஏன் ஏற்படுகிறது? குறைப்பது எப்படி?

உடல் பருமன் என்பதைத் தாண்டி சிலருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து தொப்பை இருக்கும். இது உடலுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் அழகு தொடர்பான பிரச்னையாகவும் மாறிவிட்டது. தொ... மேலும் பார்க்க

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன்: எஸ்.ஜே.சூர்யா

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். டிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ச... மேலும் பார்க்க