பாலக்கோட்டில் வீட்டுமனை பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் காா்ல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முத்து, மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் கலாவதி, வட்டக் குழு உறுப்பினா்கள் முருகேசன், சி.ராஜா, ஜி.நக்கீரன், உதயகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, பாளையம் கிராமத்திலுள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் புல எண் 11-இல் உள்ள 51 ஏக்கா் கரடு நிலத்தை வகைமாற்றம் செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
பெரும் ஆற்றை சுற்றி அரசுக்கு சொந்தமான பெரியானூா் கிராம புல எண் 16/2 -இல் உள்ள விவசாய நிலத்தை தகுதியானவா்களுக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.