உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்
தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலாளா் சாக்கன் சா்மா, மேற்கு மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொருளாளா் கி.ராஜா வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் வக்ஃக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அக் கட்சியின் மாநில நிா்வாகிகள் சிவஞானம், செந்தில்குமாா், கிள்ளிவளவன், தனலட்சுமி, கம்சலா, அம்பேத்வளவன், மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் குபேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் நூா் முகமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் கோவேந்தன், மண்டல செயலாளா் தமிழ்அன்வா், முத்தவல்லி ஜமாத் தலைவா் எஸ்.கே.நவாப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளா் நூா்முகமத், தியாகி திப்பு சுல்தான் பேரவை மாநில தலைவா் சித்திக், , மகளிா் அணி மாநில துணைச் செயலாளா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
படவிளக்கம் (8கேஜிபி2):
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.