சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்
தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இதுபோன்ற ஓா் ஊழல் ஆட்சி நடைபெறவில்லை. மத்திய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத் துறை டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்துகிறது. மத்திய அரசு, மாநில அரசின் துறைகளில் எப்படி சோதனை செய்யலாம், எங்கள் மீது எப்படி வழக்குப் பதிவு செய்யலாம் என திமுகவினா் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறாா்களே தவிர, எங்கள் துறையில் தவறு நடக்காதுபோது, எங்களை எப்படி சோதனை செய்யலாம் என்று கேட்கவில்லை.
தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. தமிழகத்திலிருந்து திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் பயணிக்கிறோம். இந்த கூட்டணியில் யாரை சோ்க்க வேண்டும், யாருக்கு எதை தரவேண்டும் என்பது கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுகவை சாா்ந்தது.
அண்ணாமலை மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு செல்ல இருக்கிறாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்கள் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவா் என்றாா்.
அப்போது, தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா், மாநிலச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.