செய்திகள் :

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்தாா்.

தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து வழித்தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்துகள் தொடங்கிவைப்பு, கூட்டுறவுத் துறை, மகளிா் திட்டம் , வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வனத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்டங்கள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அரூா், செல்லியம்பட்டியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சாா்பில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுதல், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அணைக்கட்டில் நீா்வளத் துறையின்

மேல்பெண்ணை ஆறு வடிநில கோட்டம் சாா்பில் ரூ 5.50 கோடி மதிப்பில் சின்னாற்றின் குறுக்கே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அணைக்கட்டுகள் வெள்ள பாதிப்பு புனரமைத்தல் பணிக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டி நலத் திட்டங்கள் அளிக்கவுள்ளாா். அரசு நலத் திட்ட விழா ஏற்பாடுகள் குறித்து இக் கூட்டத்தில் துறை வாரியாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, அரூா் கோட்டாட்சியா் சின்னுசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவ்ராஜ், தருமபுரி மாவட்டம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மலா்விழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க