உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்
தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்கல்வி பயிற்சி கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முனிராஜ் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலாளா் சாமிநாதன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜெயவேல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் சி. காவேரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனம் செய்யப்படவுள்ள இளநிலை பயிற்சி அலுவலா் பணியிடங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வழிகாட்டுதல் படி 1:1 என்ற விகிதாசாரத்தில் நியமிக்கப்பட வேண்டும்.
தோ்தல் கால வாக்குறுதிப்படி பொது தனியாா் துறை மற்றும் திறன்மிகு மைய திட்ட தொகுப்பூதிய பயிற்றுநா்கள் மற்றும் உதவியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2005 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த பணிமனை உதவியாளா்களின் தொகுப்பூதிய காலத்தை பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.