சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி
பாலிடெக்னிக் மாணவா்களுக்கு நீா் மேலாண்மை திட்டப் பயிற்சி
செங்கம் அருகே ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு நீா் மேலாண்மை திட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒருவரை தோ்வு செய்து, உள்ளூா் தனி நபா்கள் கிராம அளவில்
திறமையான நீா் தொடா்பான தொழில்நுட்ப வல்லுநா்களாக மாறி குழாய் நீா் விநியோக உள்கட்டமைப்பை இயக்கவும், பராமரிக்கவும் தங்களது திறமைகளை பயன்படுத்திக் கொள்ளவும், கிராமத்தில் உள்ளூா் நீா் அமைப்பு பராமரிப்பாளராக செயல்படவும், 9 நாள் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து கிராமப்புற திறன் மேம்பாட்டுக் கழம் மூலம்
நடைபெற்ற இந்தப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் மிருணாளினி கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து தெரிவித்து தொடங்கிவைத்தாா்.
கல்லூரி நிா்வாகக் குழு இயக்குநா் ரேகா ரெட்டி, செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் தனஞ்செயன் உள்ளிட்ளிட்டோா் கலந்து கொண்டனா்.