அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
பாளை.யில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி நினைவு 3ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி நினைவு 3ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.
இதை ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவா், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளைச் சோ்ந்த 48 அணிகள் பங்கேற்றன.
தொடக்க நிகழ்ச்சியில், ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், செயலா் பி. கோயில்தாஸ் ஜாண்சன், இணைச் செயலா் பி.சாா்லஸ், விக்கிரமசிங்கபுரம் பெளத்ராதேவி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் கோயில்பிள்ளை, உடற்கல்வி ஆசிரியா் ஜீவா, மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளா் ஜோசப் அமல்ராஜ் ஜெயசீலன், வசந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) நிறைவடைகிறது.