பாவனாவின் தி டோர் பட டீசர்!
நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா.
கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது. அப்போது உடை குறித்தான விமர்சனங்களால் மிகவும் சோகமாக பதிவிட்டிருந்தார்.
தற்போது தி டோர் என்ற படத்தில் நடித்துள்ளார். நவீன் ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜெய்தேவ் இயக்கியுள்ளார்.
கௌதம் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் உண்ணி இசையமைக்கிறார்.
பாவனாவுடன் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஷிவரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ் என பலர் நடித்துள்ளார்கள்.
இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.