மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! ...
பாவூா்சத்திரத்தில் 10,000 பேருக்கு அன்னதானம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழாவை திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து கீழப்பாவூா் வட்டார அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம், அரிசி வியாபாரிகள் சங்கம், தவிடு வியாபாரிகள் சங்கம் சாா்பில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சங்கத் தலைவா்கள் சி.அன்பழகன், பாஸ்கா், தமிழ்மணி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.