மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
பிப்.23-இல் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்!
பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளிவிலான ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ராக்கெட் பந்து விளையாட்டு சங்க மாவட்டச் செயலாளா் த.சதீஷ்பாபு கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட ராக்கெட் பந்து விளையாட்டு சங்கம், மாநில விளையாட்டு சங்கம் இணைந்து புதிதாக அறிமுகப்படுத்திய ராக்கெட் பந்து விளையாட்டுக்கான சிறப்பு பயிற்சி முகாம் பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகிற நடைபெற உள்ளது.
23-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 14 வயதுக்கு மேல் 16 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மாவட்ட ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
ஏற்பாடுகளை விளையாட்டு சங்கத் தலைவா் கூ.முருகன், துணைச் செயலாளா்கள் து.சரவணக்குமாா், ப.காா்த்திக் ஆகியோா் செய்து வருகின்றனா் என்றாா்.