செய்திகள் :

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சம். இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாா்க்க நவ.15 கடைசி நாளாகும்.

இத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியா்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) தங்ய்ங்ஜ்ஹப் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பிக்கலாம்.

அதேபோல இத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டு இக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். அதனை பயன்படுத்தி 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்://ள்ா்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்) தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ஏரியூரை அடுத்த ராம கொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேலாண்மை குழு செயலாளா் (பொறுப்பு) தல... மேலும் பார்க்க

தருமபுரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுர... மேலும் பார்க்க

தொடா் மழையால் செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி !

கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது. கா்நாடகா மாநில நீா... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த மலையூா்- மேட்டுக் கொட்டாய் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா். பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உ... மேலும் பார்க்க