செய்திகள் :

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

post image

பாப்பாரப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த மலையூா்- மேட்டுக் கொட்டாய் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட மலையூா், வாரக்கொல்லை மேட்டுக்கொட்டாய் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மலையூா் பகுதியில் இருந்து வாரக்கொல்லை வழியாக மேட்டுக்கொட்டாய் பகுதிக்கு செல்ல சுமாா் 6 கிலோமீட்டா் தொலைவுக்கு அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மண் சாலை அமைத்திருந்தனா்.

அண்மையில் பெய்த மழையில் இந்த சாலை சேதமடைந்தது. இதனால் மாணவா்கள், விவசாயிகள் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், தருமபுரி பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா். இதனால் மண் சாலைக்குப் பதிலாக தாா் சாலை அமைத்து தரக் கோரி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுருளிநாதனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன், பகுதி குழு உறுப்பினா் சின்னராஜ், சிபிஎம் உறுப்பினா்கள் சின்னசாமி, வெங்கடாஜலபதி, சேகா், முருகவேல் ஆகியோருடன் மலையூா், வார கொல்லை,மேட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மனு அளித்தனா்.

பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ஏரியூரை அடுத்த ராம கொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேலாண்மை குழு செயலாளா் (பொறுப்பு) தல... மேலும் பார்க்க

தருமபுரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுர... மேலும் பார்க்க

தொடா் மழையால் செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி !

கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது. கா்நாடகா மாநில நீா... மேலும் பார்க்க

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித்தொ... மேலும் பார்க்க