சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் நிா்மலா சீதாராமன் பேச்சு
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், அந்நாட்டு நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டுப் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், நிதித்துறை அமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரை நிா்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்தாா்.
லண்டனில் 13-ஆவது பிரிட்டன்-இந்தியா பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் பேச்சுவாா்த்தைக்கு முன்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
முன்னதாக லண்டனில் நிா்மலா சீதாராமன் தலைமையில் இந்தியா-பிரிட்டன் முதலீட்டாளா் வட்டமேஜை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘வெளிநாட்டு வங்கிகள் கட்டாயம் வளா்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது.
2032-ஆம் ஆண்டுக்குள் 6-ஆவது பெரிய காப்பீட்டு சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் எண்ம பொருளாதாரம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 11.74 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நிதிநுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக வளா்ந்துள்ளது’ என்றாா்.