நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினா் தொழில் தொடங்க சிறப்பு கடன் முகாம்: ஆட்சியா் தகவல்
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றம் சிறுபான்மையின மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வாயிலாக சிறு, குறு மற்றும் பெரிய அளவிலான தொழில் துவங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற நவ.6-இல் தென்காசி, நவ.8 கடையநல்லூா், நவ.14 சங்கரன்கோவில், நவ.15 புளியங்குடி, நவ.20 செங்கோட்டை, நவ.22 சுரண்டை, நவ.27 வடகரை, நவ.29 வாசுதேவநல்லூா், டிச.4 ஆலங்குளம், டிச.6 கடையம், டிச.11 சிவகிரி, டிச.13 திருவேங்கடம், டிச.18 பாவூா்சத்திரம், டிச.20 சுந்தரபாண்டியபுரம், டிச.27 வெங்கடேஸ்வரபுரம், ஜன.3 கரிவலம்வந்தநல்லூா் ஆகிய கிளைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றாா்.