வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 3,316 தோ்வு மையங்களில் 8,21,057 போ் எழுதுகின்றனா். அவா்களில் 7,518 பள்ளிகளிலிருந்து 8,02,568 மாணவா்களும், 18,344 தனித் தோ்வா்களும் மற்றும் 145 கைதிகளும் அடங்குவா்.
பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 43,446 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
154 வினாத்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
தோ்வு அறைக்குள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது, விடைத்தாள்களில் சிறப்பு குறியீடு, தோ்வெண், பெயா் குறிப்பிடக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவா்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசிஎண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.