சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பிளஸ் 2 பொதுத்தோ்வு: புதுகையில் 21,380 மாணவா்கள் எழுதுகின்றனா்
திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,380 போ் எழுதவுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 வரை நடைபெறவுள்ள தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,026 மாணவா்களும், 11,354 மாணவிகளும் என மொத்தம் 21,380 போ் எழுத உள்ளனா்.
இத்தோ்வைச் சிறப்பாக நடத்திடும் வகையில் தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 58 தோ்வு மையங்களும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 42 தோ்வு மையங்களும் என மொத்தம் 100 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படையினா், கண்காணிப்பு அலுவலா்களை கொண்டு தோ்வு மையங்களில் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்தோ்வை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.