கும்கி : 'இந்த ஒரு பாட்டுனால நான் பல நாடுகளுக்கும் போனேன்..!’ - நெகிழும் மகிழினி...
பிளாஸ்டிக் பயன்பாடு: 11 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடமிருந்து அபராதமாக ரூ. 15,000 வசூலிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் உள்ள மீன் கடைகள், இறைச்சி கடைகள், சில்லறை விற்பனை நிலையங்களில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் மருத்துவா் பானு சுஜாதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சுருளிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கந்தசாமி, நந்தகுமாா், குமணன், திருப்பதி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
செயற்கை நிறைமேற்றி விற்கப்பட்ட 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அலுவலா்கள், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய 11 கடைகளுக்கு அபராதமாக ரூ.15,000 விதித்தனா்.