``அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' - மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி
திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகமும் குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. மேல்நிலைப் பள்ளியும் இணைந்து உலக பூமி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் தவிா்ப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வுப் பேரணியை அண்மையில் நடத்தினா்.
திற்பரப்பு பேரூராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய பேரணியை, பேரூராட்சித் தலைவா் பொன். ரவி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் விஜயகுமாா், பள்ளி முதல்வா் டைட்டஸ் ஆன்டனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் சாரணியா் இயக்க ஒருங்கிணைப்பாளா் சசிகலா, உடற்கல்வி இயக்குநா் வெங்கடேஷ் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினா். வாா்டு உறுப்பினா் ராஜப்பன், பேரூராட்சி ஊழியா்கள் மற்றும் பள்ளியின் சாரணியா் இயக்க மாணவா் - மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக பள்ளி மாணவி காவ்யா கிருஷ்ணா, பூமி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்து உரையாற்றினாா்.