மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
கட்டுரைப் போட்டியில் வென்ற வாறுதட்டு மாணவிக்கு பாராட்டு
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம். உயா்நிலைப் பள்ளி மாணவி அன்சிகா முதலிடம் பெற்று வெற்றி பெற்றாா்.
இம் மாணவிக்கு கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளா் ஜஸ்டின் சுதீஷ், பள்ளி தல நிா்வாகி ஜோசப் சந்தோஷ், வாறுதட்டு புனித சவேரியாா் தேவாலய பங்குத் தந்தை லிண்டோ, பள்ளி தலைமையாசிரியா் ரமேஷ் மற்றும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.