புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்காரா் கைது
ஊத்துமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். மேலக்கலங்கல் பிள்ளையாா் கோயில் தெருவில் கடை நடத்தி வருபவா் சரவணவேல் முருகையா மகன் ஹரிகரன் (30).
அவரது கடையில் ஊத்துமலை போலீஸாா் சோதனை மேற்கொண்ட போது, அங்கு 16.600 கிலோ எடையுள்ள 82 புகையிலைப் பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் ஆலங்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.