தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அழித்து திமுகவினா் போராட்டம்
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை திமுகவினா் பெயிண்ட் மூலம் அழித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா உள்ளிட்ட திமுகவினா் திங்கள்கிழமை காலை சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்கு சென்றனா். அங்குள்ள எழுத்துப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை ஈ. ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினா் அழித்தனா்.
இதில், மாவட்ட பொருளாளா் சரவணன், நகரச் செயலா் மு. பிரகாஷ், மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.