Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
சிறகடிக்க ஆசை, ஐய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் மாலை6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
அதேபோல் இரவு 10 மணிக்கு சிந்து பைரவி தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது
மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
புதிய தொடரான பூங்காற்றுத் திரும்புமா தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
வரும் ஏப். 28 ஆம் தேதி இந்த புதிய நேரத்தின்படி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!