செய்திகள் :

புதுகையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. சரவணன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில இணைச் செயலா் க. கருப்பையா, மாவட்ட இணைச் செயலா் ஏ. கணேசன் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். 70 வயது பூா்த்தியான ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவா்களுக்கு 20 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச் சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க