செய்திகள் :

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

post image

புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் செல்வத்திடம் கொடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சராக ரங்கசாமியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை பேரவைத் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதேபோல் பாஜகவில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் நியமன சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்யவற்காக சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்துடன் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

இதில் அவர்கள் தங்கள் நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் வழங்கியுள்ளனர்.

முன்னதாக இன்று(ஜூன் 27) காலை புதுச்சேரி வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சூரானாவிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி மற்றும் பாஜக நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கட்சி மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறையில் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர்.

மேலும், புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகரன், ஊசுடு தொகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான், பாஜக மூத்த நிர்வாகி முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

There has been a stir in Puducherry political circles as three BJP-nominated MLAs from Puducherry have submitted their resignation letters to Assembly Speaker Selvam.

இதையும் படிக்க: முதல்வர் பதவி யாருக்கு? தவெகவுடன் கூட்டணியா? - ராஜேந்திர பாலாஜி பதில்!

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது. அஷ்யபாத்ரா நிறு... மேலும் பார்க்க