செய்திகள் :

புதுச்சேரி: `முதல்வருக்கு தெரியாமல் ஊழல் நடப்பதற்கு வாய்ப்பில்லை’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம்,  புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், ``புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம்

இது புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் உச்சகட்டம். ஏற்கெனவே இந்தத் துறையின் தலைமைப் பொறியாளர்களாக இருந்தவர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு தலைமைப் பொறியாளரான சத்தியமூர்த்தி ஊழல், வேலைக்கு ஆட்கள் நியமனம் உள்ளிட்ட முறைகேடுகளில் சிக்கி பண மோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். தற்போது லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம், நகைகள் மற்றும் ஆவணங்களுடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் மட்டுமல்ல, முதல்வர் மற்றும் துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். இப்படியான ஊழல்கள் அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை பணிகளில் 20% முதல் 30% சதவிகிதம் வரை கமிஷன் தொகை கைமாறியுள்ளது. இதனால், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தரமற்ற நிலையில் உள்ளன. வில்லியனூர் ஆரியப்பாளையம் மேம்பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே பழுதடைந்து கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மற்றும் குபேர் பஜார் கட்டிடங்கள் திறப்பதில் தாமதம் போன்ற பிரச்னைகள் இதற்கு சான்றாகும்.

புதுச்சேரி அரசு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த கைது நடவடிக்கைகள் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் ஒரு சிறு துளிதான். சி.பி.ஐ விசாரணை தீவிரமடையும் போது மேலும் பல ஊழல் பெருச்சாளிகள் வெளிவருவார்கள். எனவே, இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

TVK : `என்ன அப்பா இவர்? ; திமுக பாயாசம் அல்ல நாசிசம்’ - திமுக, அண்ணாமலையை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதல் பொதுக்குழு கூட்டத்தை திருவான்மியூரில் நடத்திவருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செ... மேலும் பார்க்க

”ஓபிஎஸ்ஸூம் நானும் பிரிந்தது, பிரிந்ததுதான்; இனி இணையச் சாத்தியமில்லை” - அடித்துச் சொல்லும் எடப்பாடி

தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி... மேலும் பார்க்க

`டெல்லியில் மூன்று கார்கள் மாறிய எதிர்க்கட்சி தலைவர்; ஒரே ஒரு 'ரூ'வால் அலறிய ஃபாசிஸ்ட்ஸ்' - உதயநிதி

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர், துணை எதிர்க்கட்சி தலை... மேலும் பார்க்க

`சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல’ - காட்டமான முதல்வர்; அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன், கவன ஈர்ப்பு தீர... மேலும் பார்க்க

`மாநில அரசுகளுக்கு அதிகாரம் டு கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்’- தவெக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அந்தக் கட... மேலும் பார்க்க

Seeman: "ரமலான் மற்றும் புனித வெள்ளியில் மதுக்கடைகளை மூட வேண்டும்" - சீமான் கோரிக்கை

"புனித ரமலான் மற்றும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் வாழும் சமணர்களின் ... மேலும் பார்க்க