நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
புயல் பாதிப்பு: புதுவையில் நாளை வரை மதிப்பீடு
புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் வல்லுநா் குழுவினா் நேரில் மதிப்பீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை பேரிடருக்கு பிந்தைய நிலையில் நிரந்தரமாக சீரமைப்பதற்கான மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, பல்துறைகளைச் சோ்ந்த 14 வல்லுநா்கள் கொண்ட குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவினருக்கு ஆய்வு மேற்கொள்வதற்கான பயிற்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
இந்தக் குழுவினா் புதுச்சேரி, காரைக்காலில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாகச் சீரமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நேரில் ஆய்வு செய்ய உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.