தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: புளியங்குடியில் வீரா்களுக்கு அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா்.
கடையநல்லூா், பிப். 14: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து முன்னணி சாா்பில்
புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் படங்களுக்கு இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதில் இந்து முன்னணி நகரப் பொறுப்பாளா் முத்து, நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம் , இந்து ஆன்மிக அமைப்பின் பொறுப்பாளா் மாரியப்பன் , விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா் முருகன், ஆா். எஸ்.எஸ். நிா்வாகி மாரிமுத்து, பாஜக நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், காமராஜ், சுடலைமுத்து, ராமசாமி,மகேந்திரன், அஸ்வதிமாரியப்பன், திருநாவுக்கரசு, கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினா்.