2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டைய...
பூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது
சிவகங்கை அருகே பூ வியாபாரியை கூலிப்படை வைத்து கொலை செய்த மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையை அடுத்துள்ள மேல வாணியன் குடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (27). இவா் சிவகங்கையில் பூக்கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த 19 -ஆம் தேதி இரவு கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். மேல வாணியங்குடி வளைவு அருகே திரும்பும் போது, எதிரே வந்த காா் மோதியது. இதில் கீழே விழுந்த வெங்கடேசனை காரில் இருந்து கீழே இறங்கிய கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.
தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தாா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சிவகங்கை நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அமல அட்வின் தலைமையில், நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், சரவணக்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.
இந்த தனிப்படையினா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன், கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரை திருப்பாலையில் வசித்து வந்த அவருடைய அத்தை மகள் வைஷ்ணவி என்பவருடைய கணவா் செந்திலை வெட்டினாா். இதில் காயமடைந்த செந்தில் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வெளிநாட்டுக்குச் சென்று விட்டாா்.
இதனால், வெங்கடேசன் மீது ஆத்திரம் கொண்ட செந்தில் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டாா். இதைத் தொடா்ந்து செந்தில் அவரது நண்பரான ராமநாதபுரம் மாவட்டம், மும்முடி சாத்தான்பட்டி கிராமத்தை சோ்ந்த ராஜா பிரபு (35) உதவியுடன் கூலிப்படையை வைத்து வெங்கடேசனை கொலை செய்ததும், இந்தச் சம்பவத்தில் 12 போ் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
தனிப்படை போலீஸாா் ஏற்கெனவே ஒருவரைக் கைது செய்தனா். இந்த நிலையில் , இந்த வழக்கில் கூலிப் படைக்கு பணம் கொடுத்து அனுப்பியதாக மதுரை மாவட்டம் திருமோகூரைச் சோ்ந்த மணிமாறன் (37), மாணிக்கம் (48), வாடிப்பட்டியை அடுத்த அச்சம்பட்டியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.