குடியிருப்புகளுக்கு அருகில் மேலும் புதிய நியாய விலைக்கடைகள்: அமைச்சா் எம்.ஆா்.கே...
மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.
மானாமதுரை ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு டி.சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.குணசேகரன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சாத்தையா மாநாட்டை வாழ்த்திப் பேசினாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஜி.சங்கையா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எஸ். முத்துராமலிங்கம்,
ஏ. முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.முருகேசன், துணைச் செயலா் எம். கணேசன், பொருளாளா் ஏ.அடியாக்கி, நகரச் செயலா் எஸ்.டி. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவராக என்.ராஜ்குமாா், செயலராக எம்.ராகவன், பொருளாளராக என். கண்ணையா துணைத் தலைவராக கே.பாலமுருகன், துணைச் செயலராக ஏ. ரஞ்சித்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.