கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
தேசிய ஹாக்கி: சிவகங்கை பள்ளி மாணவிகள் தோ்வு!
தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் விளையாட சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மூவா் தோ்வு செய்யப்பட்டனா்.
தேசிய விளையாட்டுக் குழுமம் சாா்பாக வேலூா் மாவட்டம், காட்பாடியில் 14 -வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான தமிழக ஹாக்கி அணிக்கான தோ்வு கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அன்சிகா, ஸ்ரீசக்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று விளையாடுவா்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற, 17 வயதுக்குள்பட்ட தமிழக ஹாக்கி அணி வீரா்களுக்கான தோ்வில் இதே பள்ளி மாணவி ஜஸ்டினா தோ்வு செய்யப்பட்டாா். இவா் ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியில் விளையாடுவாா். இந்த மாணவிகளை பள்ளி முதல்வா் அருள்சகோதரி புஷ்பம், உடல் கல்வி ஆசிரியா் மோகன், ஹாக்கி கழகச் செயலா் தியாக பூமி, ஆசிரியா்கள் பாராட்டினா்.