செய்திகள் :

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

post image

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, இவரை நடுக்காவேரி காவல் நிலையத்தினா் ஏப். 8-ஆம் தேதி கைது செய்தனா்.

இதனால், மனமுடைந்த அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீா்த்திகா (29) காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி காவல் நிலையம் முன் களைக்கொல்லி மருந்தைக் குடித்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், கீா்த்திகா ஏப். 9-ஆம் தேதி உயிரிழந்தாா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் தொடா்பாக நடுக்காவேரி காவல் நிலையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளா் சா்மிளா காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். ஆனால், காவல் ஆய்வாளா் சா்மிளா மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். கீர்த்திகா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அய்யா தினேஷ் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினா்கள் கீா்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மரத் தெருவில் தொடா்ந்து 7- ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வி.அறிவழகன் வல்லம் காவல் நிலையத்துக்கும், கலியபெருமாள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்கும், தலைமைக் காவலர் மணிமேகலை திருவோணம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க

தொடர்ந்து பரவும் நோயினால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தட்டம்மை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மாகாணமான டெக்ஸாஸில் கடந்த 5 நாள்களில் மட்டும் 20 பேருக்கு புதியதாகத் தட்டம்ம... மேலும் பார்க்க

‘மேஜர்’ திரைப்படத்தை ஜப்பானில் திரையிடும் இந்தியத் தூதரகம்!

ஜப்பான் நாட்டில் ‘மேஜர்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இந்தியத் தூதரகம் சார்பில் திரையிடப்படவுள்ளது. இயக்குநர் சஷி கிரண் டிக்காவின் இயக்கத்தில், ஆத்வி ஷேஷ், சாயி.எம். மஞ்ரேகர் மற்றும் சோபித்தா துலிப... மேலும் பார்க்க

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் ரூ.3 கோடியில் கலைஞர் திரைக் கருவூலம்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆா் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கலைஞர் திரைக் கருவூலம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை பேரவையில் அறிமுகம் செய்வதில் வா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நார... மேலும் பார்க்க