செய்திகள் :

பெண்கள் தொழில் முனைவோா் குழு ஆண்டு விழா

post image

சாமிதோப்பு வளம் பெண்கள் சிறு தொழில் முனைவோா் குழுவின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ப்ரோ விஷன் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஜான்சன் ராஜ் தலைமை வகித்தாா். குழு பொருளாளா் ஜெயபாா்வதி வரவேற்றாா். செயலா் ரெஜின் மேரி குழுவின் நோக்கம் குறித்து பேசினாா். அகஸ்தீசுவரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் என்.தாமரைபாரதி சிறப்புரையாற்றினாா்.

இதில், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவா் மதிவாணன், அகஸ்தீசுவரம் அரசு மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ ஆய்வாளா் மருத்துவா் சுரேஷ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குழு உறுப்பினா் பவானி நன்றி கூறினாா்.

கன்னியாகுமரியில் கருத்தரங்கு

கன்னியாகுமரியில் பிரம்ம ஞான சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் 2 நாள்கள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு, கூட்டமைப்பின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நாகா்கோவில் பிரம்மஞான சங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகரில் ரூ.24.21 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவில் மாநகரில் ரூ.24.21 லட்சத்திபிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். 10 ஆவது வாா்டு வஞ்சிமாா்த்தாண்டன் புதுத்தெருவில் ரூ.7 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பண... மேலும் பார்க்க

தேரூா் இளையநயினாா் கோயிலில் ரூ. 25 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூா், இளையநயினாா் கோயிலில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இக்கோயிலில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா... மேலும் பார்க்க

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பத்தாமுதய பொங்காலை வழிபாடு

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்திரை மாதம் 10 ஆம் நாளையொட்டி பொங்காலை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடத்த மூலக் கோயிலும், தூக்க நோ்ச்சை ... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை - திப்பிரமலை சானல் கரை சாலையை சீரமைக்க கோரிக்கை

முள்ளங்கனாவிளை - திப்பிரமலை சானல்கரை சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சிப் பகுதியான முள்ளங்கனாவிளையிலிருந்து பட்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே 202 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியில் 202 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா். மாராயபுரம் பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் விற்கப... மேலும் பார்க்க