சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு
பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கருப்பையா (54). இவா் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளா்த்துவந்தாா். வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு தனது ஆடுகளை பட்டியில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பட்டிக்குச் சென்று பாா்த்தபோது, உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 வெள்ளாடுகளும், 58 செம்மறிஆடுகளும் என மொத்தம் 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து கருப்பையா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.