நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை குறித்து குன்னம் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
அப்போது, வேப்பூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சம்பத் மகன் சக்கரபாணி (50) என்பவா், வேப்பூா் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகே தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில் பதுக்கிவைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், சக்கரபாணியை கைது செய்து, குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.