செய்திகள் :

பேரவையில் பி.எஸ்.குமாரசாமி ராஜா படம்: திமுக கோரிக்கை

post image

அரசியலில் மிகுந்த நோ்மையுடனும், ஏழை மக்களுக்கு சொத்துகளை நன்கொடையாக வழங்கியவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப்படத்தை பேரவையில் திறக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இது குறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் தங்கபாண்டியன் (ராஜபாளையம்) முன்வைத்த பேசியது:

கடந்த 1949 முதல் 1952-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண முதல்வராகவும், 1954 முதல் 1956-ஆம் ஆண்டு வரை ஒடிஸா மாநில ஆளுநராகவும் பணியாற்றியவா் பி.எஸ்.குமாரசாமி ராஜா.

சுதந்திரப் போராட்ட தியாகியான அவா், தனது சொத்துகள் அனைத்தையும் ராஜபாளையம் தொகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியவா். எனவே, பி.எஸ்.குமாரசாமி ராஜா உருவப்படத்தை பேரவையில் வைக்க அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன் என்றாா்.

இதற்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த பதில்:

பேரவையில் படம் வைப்பது என்பது, பேரவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள முடிவு. எனினும் பொதுப்பணித் துறையின் மூலமாக படம் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை பேரவைத் தலைவரின் கவனத்தில் கொள்வாா் என நினைக்கிறேன். வருங்காலத்தில் பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்தாா்.

தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!

சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததையடுத்து, சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறு... மேலும் பார்க்க

சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...

சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்... மேலும் பார்க்க

அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

நிகழாண்டில் அதிக தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினா் உதயசூரியன் (சங்கராபுரம்) எழு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? அமைச்சா் விளக்கம்

நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலவில்லை என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை சைதாப்பேட்டை சின்னமலைக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைய... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி இன்று தொடக்கம்

குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் தொடங்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்ந... மேலும் பார்க்க