பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
போடி வட்டம், கோடாங்கிப்பட்டி திருச்செந்தூா், குணசீலன் கடைத் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (65). இவா், கடந்த வெள்ளிக்கிழமை கோடாங்கிப்பட்டியில் போடி- தேனி தேசிய நெடுஞ்சாலையை கடந்தாா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் சுப்புராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிச்செட்டிபட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் வழக்குப் பதிந்து தப்பியோடிய இரு சக்கர வாகன ஓட்டுநரை தேடி வருகிறாா்.