அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
பொங்கல்: ஜன.17-இல் அரசு விடுமுறை அளிக்கக் கோரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன. 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டுமென அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் அனுப்பியுள்ள கடிதம்:
பொங்கல் பண்டிகைக்காக, ஜன. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாளான 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலை நாளாக உள்ளது. அதைத் தொடா்ந்து, வரும் 18 மற்றும் 19-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும்.
ஜன. 17-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடா்ந்து விடுமுறைகள் கிடைக்கும். இதனால், பொங்கல் பண்டிகைக்காக வெளியூா் செல்லும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூடுதலான நாள்கள் தங்களது ஊா்களில் தங்கும் நிலை நல்ல சூழல் ஏற்படும். எனவே, ஜன. 17-ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலா் ஒன்றியம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.